திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இரண்டாவது ரயில் நிலையம் அருகில் ஜோதி சாமி தெருவில் உள்ள மார்க்கெட்டில் பத்மா என்பவர் பூ வியாபாரம் செய்து வருகின்றார்.
இவரது உறவினரான கஸ்தூரி என்ற 68 வயது மூதாட்டி முருகப்பா நகரில் உள்ள இவர்களது நெருங்கிய உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் இவர் மார்க்கெட்டில் உள்ள உறவினருக்கு இன்று சாப்பாடு கொடுத்து விட்டு
ரயில்வே கேட்டை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது
திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லக்கூடிய மின்சார விரைவு ரயில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்ததை அறியாமல் தண்டவாளப் பகுதியில் நின்று கொண்டிருந்தத மூதாட்டி மீது மோதியதில் ரயிலின் அடியில் சிக்கிக் கொண்டார்.
இதனால் ரயில் உடனடியாக 100 அடி தூரம் சென்று நிறுத்தப்பட்டது.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு முதல் சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயமடைந்திருந்ததால் மருத்துவர்கள் மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.