கற்பக விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்துக் கொள்ளை

62பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சுப்பிரமணியபுரம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது இந்த கோயிலை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பராமரிப்பு செய்து வருகின்றனர். இந்த கோயிலை இன்று திறந்து பூஜை செய்ய வந்த பொது மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது கோயிலின் முன்பக்க கதவை உடைத்து. உள்ளே சென்ற கொள்ளையர்கள் கோயில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த உண்டியல் பணம் ரூபாய் 30, 000 கொள்ளையடித்துள்ளனர். ஒரு வருடத்திற்கான உண்டியல் வசூல் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசாருக்கு கோயில் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் இந்த பகுதியில் கோயில் திருட்டு நடந்த சம்பவத்தில் ஆய்வு செய்து மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து கோயில் நிர்வாகத்திடம் புகாரை பெற்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி