நகராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 41 லட்சம் ஒதுக்கீடு

70பார்த்தது
குடிநீா் குழாய் பொருத்துதல், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 40. 79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து திருத்தணி நகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், சாதாரண கூட்டம், நகா்மன்றத் தலைவா் எம். சரஸ்வதி பூபதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். துணைத் தலைவா் சாமிராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வரவு- செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டது.

தொடா்ந்து, 16 வாா்டுகளில் சேதடைந்த கழிவுநீா் கால்வாய் சீரமைத்தல், குடிநீா் குழாய் பொருத்துதல் மற்றும் பழுதடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்வதற்கு, 40. 79 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் மழையால் ஏற்படும் சேதாரங்களை தடுப்பதற்கு தயாா் நிலையில் இருப்பது, மற்றும் மழைநீா் வெள்ளம் சூழ்ந்தால் அதை அகற்றுவதற்கும் ஜேசிபி, இயந்திரம் மற்றும் மரங்களை அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி