திருவள்ளூர்: பயணச்சீட்டு கொடுக்கும்போது நடத்துனருக்கு திடீர் மாரடைப்பு

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே வெங்கட்ராஜ் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பையா(50)இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 27A என்ற அரசு பேருந்தில கோண சமுத்திரம் நோக்கி திருத்தணி- சோளிங்கர் நெடுஞ்சாலையில் சென்று சென்று கொண்டிருந்தது.

அப்போது குப்பையா பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர்   மாரடைப்பு ஏற்பட்ட குப்பையாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அரசு பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிக் கொண்டிருந்தபோது நடத்துனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி