போலி நகைகளை அடமானம் வைத்த 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது

57பார்த்தது
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் மல்லாரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்டைய்யா என்பவரின் மனைவி லதா (48) இவர் திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் ரேகா என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் கடந்த மாதம் 22ஆம் தேதி 29 கிராம் தங்க நகை அடகு வைத்து ரூ. 1. 25 லட்சம் கடன் பெற்றுள்ளார். 2வது முறையாக மூன்று நாட்களுக்கு முன்பு அதே கடையில் 20 கிராம் நகை அடகு வைத்து ரூ. 90 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அடகு வைத்த நகைகள் சோதனை செய்தபோது அவை அனைத்தும் போலி நகைகள் என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடையின் உரிமையாளர் போலி நகைகள் அடகு வைத்து பணமோசடி தொடர்பாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு எஸ் ஐ மாலா லதாவை கைது செய்து விசாரணையில் திடுக்கிடும தகவல் வெளியானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி