திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சரஸ்வதி பூபதி தலைமை தாங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் ஆ. சாமிராஜ் முன்னிலை வகித்தார். 21 நகரமன்ற கவுன்சிலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நகராட்சியில் வரவு, செலவு கணக்கு தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய பணிகள் தேர்வு தொடர்பாக உறுப்பினர்கள் நகரமன்ற பார்வைக்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைந்து செயல்படுத்துவம், மழைக்காலங்களில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் கால்வாய்களில் அடைப்பு இருந்தால் அதனை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும். குடிநீர், சாலை, மின் விளக்கு, தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் செயல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.