ராணுவ வீரரின் உடல் 42குண்டுகள் முழங்க மரியாதையுடன் அடக்கம்

81பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பெரிய ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ஸ்டான்லி இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் நாய்க் சுபேதார்  வீரராக பணியாற்றி வந்திருந்தார். லடாக் பகுதியில் கடந்த 9ந் தேதி பணியில் இருக்கும் பொழுது ராணுவ வீரர்களுக்கு ராணுவ வண்டியில் உடைகள் எடுத்துச் செல்லும் பொழுது மலைப்பகுதியில் ராணுவ வண்டி நிற்கும் பொழுது பின்னால் வந்த ஒரு லாரி ராணுவ வண்டியின் பின்புறம் மோதியதில் விபத்தில் ராணுவ வீரர் ஸ்டான்லி மரணம் அடைந்தார். அவரது உடல் ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி எடுத்து வரப்பட்டு டெல்லியில் இருந்து நேரடியாக சென்னைக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து உடல் சாலை மார்க்கமாக சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கிராமத்தில் வைக்கப்பட்டது. அவரின் உடலுக்கு அவரது கிராம மக்கள் மரியாதை செலுத்தினர். இதனையேடுத்து இவரது உடலுக்கு அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்து அவரது  குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து முழு ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர் ஸ்டான்லி உடன் அவர் சொந்த கிராமத்தில் உள்ள மயானம் எடுத்துச் செல்லப்பட்டு ராணுவ வீரர்கள் 14 பேர் துப்பாக்கிகள் ஏந்தி வானத்தை நோக்கி 42 குண்டுகள் முழுங்க மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி