பொன்னேரி - Ponneri

லஞ்சம் பெற்ற வருவாய்த்துறை உதவியாளர் கைது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பெருங்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் என்கின்ற கிராம உதவியாளர். தான் பணி ஓய்வு பெற்ற பின் தனக்கு வரவேண்டிய ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற வேண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அந்த பணம் கிடைக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை மூன்றாம் நிலை உதவியாளர் ஷேக் முகமது என்பவரிடத்தில் தன்னுடைய ஓய்வூதிய பணம் பெற வேண்டி கோரி உள்ளார். அதற்கு ஷேக் முகமது அந்த பணம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு 3000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று ஷேக் முகமது கேட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் ராமதாஸ் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் விளைவாக ஷேக் முகமதுவை திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று(செப்.25) சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా