திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்களில் தைப்பூச விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் பாரதப் பிரதமர் மோடியின் பல்வேறு சாதனைகளை விளக்கும் வகையில் காலண்டர் மற்றும் பிரசாத பைகளை பாஜகவினர் வழங்கினர்.
அதனை ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சிறுவாபுரியில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியதால் பாஜகவினர் செய்வதறியாமல் திகைத்தனர். அருகில் இருந்த காவல்துறையினர் கூட்டத்தினரை கூட கட்டுப்படுத்த உதவாமல் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் ஏற்பாட்டில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதப்பை மற்றும் காலண்டரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.