திருவள்ளூர் அருகே வேர்க்கடலை வயலுக்கு மத்தியில் வேட்டையன் அரண்மனை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு. கார்வேடு நகர ராஜா காலத்தில் வரி வசூல்
செய்ய கட்டப்பட்ட தங்களுடைய ஜமீன் அரண்மனை என்றும் கிராம மக்கள் சிதிலமடைந்துள்ளது அரசு சீரமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்
திருவள்ளூர் அருகே கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரம் வேர்க்கடலை வயல்களுக்கு இடையே வேட்டையன் அரண்மனை பாணியில் கார்வெட் நகர மகாராஜாவின் பாழடைந்த கோட்டை சிதிலமடைந்து பாம்புகளோடு இருப்பதை சீரமைத்து தர வேண்டுமென ஆற்காடு குப்பம் கிராம மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் கொசஸ்த்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் பாதுகாப்பாக கிராம மக்கள் தங்கும் இடமாகவும் காணும் பொங்கல் சமயங்களில் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏழு கிராம மக்கள் தங்களது கிராம உற்சவ அம்மன் சிலைகளை கொண்டுவந்து விழா நடத்தும் இடமாகவும் இருந்து வருகிறது தற்காலிகமாக வண்ணம் தீட்டி கோலமிட்டு மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் பாம்புகள் சிதிலமடைந்து விரிசல் விழுந்துள்ள பாரம்பரியம் மிக்க 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டிய மண்டபத்தை புணரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.