தர்மபுரி மாவட்டம் முருக்கம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.