நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

70பார்த்தது
திருவள்ளூர்

பிரசித்திபெற்ற சிறுவாபுரி பால சுப்பிரமணிய சாமிகோவிலில்
கோபுர வாசலில் தீபமேற்றி வழிபாடு செய்த பக்தர்கள்

நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்


திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி திருக் கோவிலில்
செவ்வாய் கிழமை தினமான இன்று
சஷ்டி விரதத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை
தரிசனம் செய்தனர்
இலவச கட்டனம் 50 ரூபாய் கட்டணம்
100 ரூபாய் கட்டண தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்களால் கோவிலில்
கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள்
கோபுர வாசலில் முன்பாகவே தீபம் ஏற்றி வழிபட்டு செல்கின்றனர் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நெய்தீபம் ஏற்றி வழிபடும் தீபங்களை காலணிகளுடன் ஒதுக்கி தள்ளும் நிலை உள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
லட்சகணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்கவும்
தீப அகல் விளக்குகளை
முறையாக அகற்றிடவும் கூட்டநெரிசலை முறைப்படுத்தவும் காவல்துறையினர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி