ரயில் பயணிகளிடம் கையெழுத்து இயக்கம்

58பார்த்தது
கும்மிடிப்பூண்டி சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்கள் மார்க்கத்தில் பள்ளி கல்லூரி மருத்துவமனை கூலி தொழில் பணிக்கு செல்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் என பல லட்சக்கணக்கானோர் சென்னையை நோக்கி ரயில்கள் மார்க்கமாக பயணித்து வருகின்றனர் தினந்தோறும் லூப் லைன் சிக்னல் என்று செயல்களால் நேரத்தோடு ரயில்கள் வருவதில்லை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் சரக்கு ரயில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது
சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கமாக அதிக ரயில்களை இயக்க வேண்டும் கூடுதல் பெட்டிகளை இணைத்து ரயில்களை இயக்க வேண்டும் ரயில்வே துறையில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் லூப் லைனில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களை அதிவிரைவாக எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி பொன்னேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளிடம் கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது இதனை பலமுறை ரயில்வேத்துறைக்கும் ரயில்வே துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் புகார் மனு மனுக்கள் அளித்தும் எந்த பலன் அளிக்கப்படவில்லை எனக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு லட்சம் கையெழுத்து பயணிகளிடம் பெற்று ரயில்வே துறை அமைச்சருக்கும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கும் அனுப்பி வைப்பதற்காக கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி