மின்விளத்துறை அதிகாரிகளை கண்டித்த மாவட்ட ஆட்சியர்

73பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் பழமையான டச்சு கல்லறை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வின் போது ஹிந்தி மொழியில் பேசி விவரங்களைக் கேட்டறிந்தார் அரங்கம்குப்பம் பகுதியில் மீன் இறங்கு தளம் புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில் அந்தப் பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருவதை ஆய்வு செய்த ஆட்சியர்
செப்டம்பர் மாதம் முடிக்க வேண்டிய பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தும் ஒப்பந்த பணியாளர், மீன்வளத்துறை அதிகாரிகளை ஆட்சியர் கண்டித்து முறையாக பணிகளை செய்ய அறிவுறுத்தினார்
கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க 20 நாட்களாகும் என தெரிவித்த நிலையில் இந்தக் கட்டிடத்திற்கு மின் இணைப்பு பொறுத்த 20 நாட்கள் தேவையா 20 நாட்களில் கட்டிட திறப்பு விழா நடத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார் மீன்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தலில் பணிகள் நடைபெறுவதாக மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்ததை தொடர்ந்து பணி முடிக்காதது காலதாமதம்தான் என்றும் விரைந்து கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டித்தார் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் விட்டுவிட்டால் கண்டிப்பாக உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி