உ.பி., பைக் மீது லாரி மோதி 3 இளைஞர்கள் பலி

55பார்த்தது
உ.பி., பைக் மீது லாரி மோதி 3 இளைஞர்கள் பலி
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள திக்பால்கஞ்ச் பாதாய் பகுதியில் இருந்து 3 இளைஞர்கள் ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது பீகார்-பக்சர் சாலை அருகே அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதியது. இந்த கோர விபத்தில் சர்பராஸ் (22) மற்றும் இரட்டை சகோதரர்கள் அர்பாஸ் கான் (16) மற்றும் அடில் கான் (16) ஆகியோர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி