திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணவர்களுடன் கலந்துரையாடல்

72பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வருகின்ற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள தேர்வில் வெற்றி பெறுவதை குறித்து, மாத்தி யோசி! என்ற தலைப்பில் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி?
எளிதாக படிப்பது எப்படி ,
பொதுத் தேர்வின்போது குழப்பம் இல்லாமல் தேர்வு எழுதுவது எப்படி, கேள்வித் தாள்களை பார்த்தவுடன் பதட்டம் அடையாமல் இருப்பது எப்படி, படித்தது எளிதாக நினைவில் வைத்து கொள்வது எப்படி என்ற பல்வேறு தலைப்புகளில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில். தலைமையில்
திருவள்ளூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில்
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கலந்துகொண்டு பயிற்சிப்பட்டறை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொது தேர்வின் போது கல்வி சம்பந்தமாக ஏற்படும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலிடம் மாணவர்கள் காரசாரமாக, கேள்விகள் எழுப்பினார்கள்
அப்பொழுது மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் கட்டாயமாக கல்வியை நேசிக்க வேண்டும் எனவும். அப்படி நேசிக்கும் விதத்தில் தேர்வு எழுதும் போது எளிய முறையில் நாம் படித்த கல்வி எளிதில் நமக்கு ஞாபகத்தில் வரும் என கூறினார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி