மகாராஷ்டிரா: மும்பை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் கேப்டன் மிலிந்த் ரெகே தனது 76வது வயதில் காலமானார். அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தில் தேர்வுக் குழு உறுப்பினர் மற்றும் வழிகாட்டி உட்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது மறைவு மும்பை கிரிக்கெட் வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1967/68 முதல் 1977/78 வரை மும்பை கிரிக்கெட் சங்கத்திற்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.