திருத்தணி அருகே சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டி. வி. புரத்தில் தனியார் ஓட்டலில் சாப்பிடுவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார்களை பச்சைக் கொடி காட்டி ஓட்டல் ஊழியர் அழைத்துக் கொண்டிருந்தார்
அப்போது திருத்தணியில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பதி சென்று கொண்டிருந்த மணமகள் சுஷ்மிதா- மற்றும் மணமகன்-சுரேஷ் வீட்டார் எதிர் திசையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு அரக்கோணத்தை சேர்ந்த ஹரி என்பவரது குடும்பத்தார் 5 பேர் வந்த கார் மீது மோதியது பின்னால் வந்த 3வது கார் முத்து என்பவர் சென்னை நோக்கி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த கார் பின்புறம் மோதியது இந்த வண்டியில் வந்த மென்பொருள் பொறியாளர் குடும்பத்துடன் திருப்பதி சாமி தரிசனம் செய்து விட்டு வந்தவர் காரும் இந்த விபத்தில் பின்புறம் மோதியதில் இவரது தாய் மனைவி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்
படுகாயம் அடைந்த 10 பேரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக 30 நிமிடம் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தவர்கள்
சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை