புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாள் மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தரப்பட்ட புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று (பிப். 18) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெருமாள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.