அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தவறானது என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகி கூறியுள்ள நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் தனது பணிகளை தொடங்கி விட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக பாண்டியராஜன் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.