புழல்: பக்தர்களுக்கு அன்னதான திட்டம் துவக்கி வைத்த அமைச்சர்

67பார்த்தது
புழலில் பழமை வாய்ந்த திருமூலநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதான திட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புழலில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை திருமூலநாதர் சுவாமி திருக்கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. 

இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக இக்கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு இன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 100 பேருக்கு தினந்தோறும் இந்து சமய அறநிலையத்துறையினரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முன்னதாக அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை வரவேற்க கோவில் முன்பாக இரட்டை இலை சின்னத்தில் வண்ண கோலம் வரையப்பட்டிருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி