திருவள்ளூர்: பாலசுப்ரமணியசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை

65பார்த்தது
திருவள்ளூர் ஆரணி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 

இந்நிலையில் கடந்த 3மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம் தலைமையில் கோயில் செயல் அலுவலர் மாதவன், மற்றும் இந்து அறநிலையத்துறை பொன்னேரி ஆய்வாளர் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. 

திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.98லட்சத்து 68ஆயிரத்து 960ரூபாயும், தங்கம் 113கிராமும், வெள்ளி 9கிலோ 240கிராமும், வெளிநாட்டு கரன்சியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி