சென்னையில் 17 வயது மகளுக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைந்தகரையை சேர்ந்த சிறுமிக்கு இஸ்லாமிய மதத்தின்படி 29 வயது வாலிபருடன் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது. தகவலின் பேரில் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் சென்று சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.