திருவள்ளூர்: குடிநீர் மைய பூமி பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ

63பார்த்தது
திருவள்ளூர் வேலூரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பூமிபூஜையில் பங்கேற்ற பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் இடிந்து நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை கட்டித் தர கோரியும் பேருந்து வசதியை ஏற்படுத்திதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் வேலூர் ஊராட்சியில் தெலுங்கு காலனி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதற்கான பூமிபூஜையை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கிவைத்தார். அப்போது கிராம மக்கள் தங்கள் பகுதியில் இடிந்துபோன நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் தினந்தோறும் வந்துபோவதாகவும், அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தரக் கோரியும், பேருந்து வசதியை ஏற்படுத்திதர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும் பேருந்து வசதி ஏற்படுத்திதரவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி