மாதவரம் - Madhavaram

சிறுவாபுரி முருகன் கோவில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். பங்குனி உத்திரத் திருவிழாவான இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிறுவாபுரி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சிறுவாபுரி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் புகைப்படம், செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా