

திருத்தணி: கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் வாலிபர் சடலம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பெரியார் நகர் நகராட்சியின் குப்பைக் கிடங்கின் பின்புறம் அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி குட்டையில் வாலிபர் சடலம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற திருத்தணி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில் போலீஸ் தரப்பில் கூறப்படுவது இறந்துபோன வாலிபர் சுதாகர் என்பதும், ரயில்வே கோட்ரஸ் திருத்தணி நகராட்சியில் குடியிருந்து வருகின்றார். மேலும் சுதாகர் திருமண மண்டபங்களுக்கு அலங்கரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 50,000 ரூபாய் பணத்துடன் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றவர் காணவில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் தேடியுள்ளனர். தற்போது பிணமாக இந்தப் பகுதியில் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இறந்துபோன சுதாகர் பிரேதத்தை திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குப்பைக் கிடங்கு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் இறந்தவர் சுதாகரின் செல்ஃபோன், இருசக்கர வாகனம், மற்றும் பணம் காணாமல் போயுள்ளது. அரை நிர்வாணத்தில் தற்போது சுதாகர் வாலிபரின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.