முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது இடுகைகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது நம்பகமான ஊடகங்கள் மூலம் செய்திகள் மற்றும் விளம்பரங்களை சரிபார்க்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டிருந்தால் http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறை கூறியுள்ளது.