செங்குன்றம்: மத்திய அரசினை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
செங்குன்றத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வஃக்ப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றிய மத்திய அரசினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எம் எல் பிரபு தலைமையில் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே வஃக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் கட்சியினர் பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்
பறிக்காதே பறிக்காதே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்காதே என கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பி சட்டத்தை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர் கட்சியினர் அதிக அளவில் திரண்டு வந்ததால் அவர்களை சாலைக்கு வரவிடாமல் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல்
நடவடிக்கை மேற்கொண்டனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளங்கோவன் மாவட்ட இணை செயலாளர்
மாவட்ட பொருளாளர் மனோஜ்
மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி மாவட்டத் துணை செயலாளர் நிவேதா செங்குன்றம் நகர செயலாளர் விஜி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி