அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் அமைந்திருக்கும் Buc-ee's தான் உலகின் மிகப்பெரிய பெட்ரோல் ஸ்டேஷனாக திகழ்கிறது. 75,000 சதுர அடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பெட்ரோல் பங்கில் 120 பெட்ரோல் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் பம்புகள் மட்டுமல்லாமல் இனிப்புகள், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கழிப்பறைகளும் உள்ளன. கழிப்பறைகள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுவதாக பலரும் கூறுகின்றனர்.