புழல்: தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பொன் முத்துராமலிங்கம் தெருவில் பேன்சி ஸ்டோர் உள்ளது. இந்த கடையை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாதுராம் கடை நடத்தி வருகிறார். கடையில் இவரும் இவரது இளைய மகனும் அக்.16 இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செங்குன்றம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தந்தை மகன் எதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள், கடன் தொல்லை பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தந்தை மகன் தற்கொலை செய்து கொண்டதால் பாடியநல்லூர் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.