மாதவரம்: இன்ஸ்டாகிராம் நட்பால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

67பார்த்தது
மணலியைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு கோபிநாத் என்பவருடன் திருமணம் நடைபெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 30நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார் என்பவர் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஆகியுள்ளார்
முதலில் நண்பராக பழகி வந்தவர், பிறகுநான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என நம்பிக்கை ஏற்படும்படி பேசியுள்ளார். ஜெயக்குமாரை சந்திக்க ரெட்டேரி ஜங்ஷனுக்கு அந்த பெண் சென்றுள்ளார்.
அங்கு ஜெயக்குமார் மாதுளை ஜூஸ் வாங்கிக் கொடுத்து அருகில் உள்ள லாட்ஜில் இருக்கும்
தனது நண்பரை பார்த்து விட்டு வரலாம் என அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ஜெயக்குமாரின் நண்பர் அங்கு இருந்துள்ளார்.
சிறிது நேரத்தில் பெண் மயங்கியுள்ளார்.
மாலை 4. 30 மணிக்கு ஜெயக்குமார்
தன்னை எழுப்பிய போது,
தான் அரை மயக்கத்தில் இருந்ததாகவும், ஆடைகள் அனைத்தும் கலைந்து இருந்ததாகவும், பின்னர் மணலி செல்லும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு சென்று பார்த்தபோதுதான், தனது கழுத்தில் இருந்த மூன்றரை சவரன் செயின் மாயமானது தெரியவந்ததாகவும்
இதையடுத்து அந்த பெண் பலமுறை முயன்றும் ஜெயக்குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.
தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பெண் இது தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி