அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

76பார்த்தது
திருத்தணி நகராட்சியில் காந்தி சாலையில் உள்ளது டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளி ஆறாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை செயல்படுகிறது இந்த பள்ளியில் தெலுங்கு பாடமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது காலாண்டு விடுமுறை நடைமுறையில் உள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் திடீரென்று மூன்று கார்களில் வந்து இறங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த பள்ளியில் உள்ள 94 வருடம் பழமையான கட்டடத்தை வெளிப்புறத்தில் 10 நிமிடத்தில் ஆய்வு செய்து இந்த கட்டிடத்தை புதுப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கட்டடம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் மூன்று வருடமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பள்ளியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது முழு உருவ வசதிக்கு அந்தப் பள்ளியில் காலாண்டு விடுமுறை பேப்பர் திருத்தும் பணியில் இருந்த மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர்களை அந்த பள்ளியில் அலுவலகத்தில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் 15நிமிடத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் காரில் ஏறி பறந்து போனார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி