புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று(அக்.5) சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆதி சீனிவாசா ரக்ஷா டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் கரியமாணிக்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆலய வாசலிலிருந்து பஜனை பாடல்களுடன் குடையும் பெருமாளின் பாதமும் புறப்பட்டு சக்திவேல் நகர், வனிதா நகர், பாலாஜி நகர், வ உ சி தெரு ஆகிய பகுதிகளில் வீதி உலா சென்று இறுதியாக காவாங்கறையில் உள்ள அருட்பெரும்ஜோதி அருள் அமுத நிலையத்தை வந்தடைந்தது.
ஆதி சீனிவாசா ரக்ஷா அறக்கட்டளை அறங்காவலர் ரஞ்சித் குமார், ஆலய அறங்காவலர் ரவி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.