கும்மிடிப்பூண்டி - Kummidipoondi

ஆண்டார்குப்பம்: நிர்வாகிகளுக்கு தங்கமோதிரம்; உறுப்பினர் கூட்டத்தில் அறிவிப்பு

ஆண்டார்குப்பம் பகுதியில் வருகிற 19 தேதி முதல்வர் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பாக கட்சி பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஒரு சவரன் தங்க மோதிரம் முதல்வர் கையால் அணிவிக்கப்படும் என பொது உறுப்பினர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. வீடு இல்லாத திமுக கட்சிக்காரர்களுக்கும் சாதாரண தொண்டருக்கும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அவர்களின் சொந்த செலவில் வீடு கட்டித் தர பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தார் திமுக ஒன்றிய கழகச் செயலாளர்.  திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வருகிற 19ஆம் தேதி ஆண்டார்குப்பத்தில் ஒரு லட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் பொதுமக்களை அழைத்து வந்து சிறப்பாக செயலாற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகளை பாராட்டி ஒரு சவரன் தங்க மோதிரம் முதல்வர் திருக்கரங்களால் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய திமுக ஒன்றிய கழக செயலாளர் J. மூர்த்தி வீடு இல்லாத திமுக கட்சிக்காரர்களுக்கும் சாதாரண தொண்டருக்கும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அவர்களின் சொந்த செலவில் வீடு கட்டித்தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా