ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றம் வியாபாரிகள் புலம்பல்

60பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் சொந்தமான இடம் காவல் நிலையம் அருகில் மற்றும் கமல தேர் நிற்க வைத்துள்ள இடத்தில் எதிரில் உள்ளது இந்த இடத்தில் பால் கடை, மளிகை கடை, பழக்கடை, ஆகிய கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததாகவும் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தை அகற்ற வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டதில் இணங்க அக்கிரமிப்பு செய்தவர்கள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை விட்டு விலகி அவர்கள் சொந்த இடத்திற்கு பின்னோக்கிச் சென்றனர் ஆக்கிரமிப்பு இடம் கோயில் நிர்வாகம் மீட்டெடுத்தனர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க அந்த பகுதியில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கான பணிகளுக்குகாக கோயில் நிர்வாக அதிகாரிகள் வந்தனர் அப்போது கடைக்காரர்கள் சுவர் கட்டக்கூடாது என்று கோயில் அதிகாரிகளிடத்தில் கடும் வாக்குவாதம் செய்தனர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து நீங்கள் கண்டிப்பாக இந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை செய்துவிட்டு
கோயில் அதிகாரிகள் சென்றனர்
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நாங்கள் எங்கே செல்வோம் என்று கோயில் அதிகாரி இடத்தில் செய்து புலம்பினார்கள் ஏப்ரல் 7ம் தேதி இந்த பகுதியில் கோயில் கமலத் திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதற்காகத்தான் இந்த பகுதியில் உள்ள ஆக்கவிப்புகளை கோயில் அதிகாரிகள் அகற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி