கும்மிடிப்பூண்டி - Kummidipoondi

கும்மிடிப்பூண்டி: கஞ்சா கடத்தல் விவகாரத்தில் காவலர் கைது

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சிலிக்கான் மணல் ஏற்றி வந்த லாரியில் 32 கிலோ கஞ்சா கடத்தி வந்ததை பறிமுதல் செய்து கோயம்புத்தூரைச் சேர்ந்த விவேக், திருச்சி முகமது அசாருதீன், ஆந்திர மாநிலம் இச்சா புறத்தைச் சேர்ந்த லட்சுமி பிரியா, மதுரையை சேர்ந்த ஆதீஸ்வரன் என்கிற சிவா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்தலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் பழனி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்த நிலையில் அவர் கஞ்சா கடத்தல் விவகாரம் தொடர்பாக ரூ. 2 லட்சம் பண பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரைக் கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా