கொடூரமாக வெட்டிய சம்பவத்தில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், தோட்டக்காடு மேட்டு காலனி பகுதியை சேர்ந்த ரகு மனைவி ஜெயபாரதி ரகுவுக்கு விஷ்ணு விஷால் என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள்
3 மாதத்திற்கு முன்பாக பொன்னேரி சின்னக்காவனம் பகுதியை சார்ந்த லட்சுமணன் பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை விஷ்ணு கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தன்னுடைய ஊருக்கு வர வைத்து வெட்டி கொலை செய்கிறார். இதன் காரணமாக விஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில் கணவனை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்க வேண்டும் என லட்சுமணனின் மனைவி ரம்யா திட்டம் தீட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரகு வீட்டிற்கு கூலிப்படையுடன் ரம்யா சென்று வீட்டின் கதவை திறப்பதற்காக ரம்யா தன்னை பெண் காவலர் என கூறி உங்கள் மகனை பற்றி விசாரிக்க வேண்டும் கதவை திறங்கள் என்று கூற உறக்கத்தில் இருந்த ரகு வீட்டின் கதவை திறந்து இருக்கிறார், ரம்யா உடன் வந்த கூலிப்படையினர் ரகுவையும் அவரின் மனைவி ஜெயபாரதி விஷ்ணுவின் தம்பி விஷாலின் மனைவி அர்ச்சனா ஆகியோரை கூலிப்படையினர் சரமாரியாக தலை, கைகளில் வெட்டி விட்டு நகைகளையும் திருடி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது, ரம்யாவையும், மாறன் ராஜ், திருப்பதி ஆகியோரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி