திருவள்ளூர் அருகே சவுடு மண் குவாரியில் முறைகேடு நடப்பதாக கூறி கிராமத்தினர் மண் ஏற்றி சென்ற லாரிகள் முற்றுகை - வாகனங்களை முற்றுகையிடும் நபர்கள் மீது லாரியை ஏற்றுவதைப் போல லாரிகளை இயக்கி செல்லும் ஓட்டுநர்களால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் பகுதியில் மண்குவாரி செயல்பட்டு வரும் நிலையில்
மண் எடுத்துக் கொள்ள அதிகாரிகள் கொடுத்த சர்வே எண் 688/1 ல் அனுமதி பெற்றுவிட்டு,
அருகாமையில் உள்ள பல சர்வே எண்களின் உள்ள நிலங்களில் சவுடு மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி மண்குவாரியில் மண் ஏற்றி செல்லும் லாரியை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
மண் லாரியை நிறுத்தும் நபர்கள் மீது லாரி ஓட்டுநர் ஏற்றுவது போல சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ,
மேலும் ஆற்று படுகையில் மண்ணள்ளுவதற்கு அனுமதி அளித்தது யார், அதேபோன்று ஆற்றில் இருந்து மண் எடுத்து செல்வதாகவும், அளவுக்கு மீறி அதிக ஆழத்தில் மண் எடுப்பதாகவும் கிராமத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர்,
இது குறித்து பல முறை மாவட்ட சுங்க அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டில் உள்ள கிராம மக்கள்,
அதிகாரிகள் வரும் வரை வாகனங்களை விடமாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.