கும்மிடிப்பூண்டி அருகே குட்கா கடத்த முயன்ற நான்கு பேர் கைது

75பார்த்தது
கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் பகுதிகளில் 380 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருட்கள் சரக்கு வாகனம் ஆட்டோவில் பறிமுதல்
நான்கு பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் சிறுபுழல் பேட்டை அருகே புதுப்பேட்டை
பகுதியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அதில் சுமார் 280 கிலோ
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதை கண்ட போலீசார் கும்மிடிப்பூண்டி காட்டு கொள்ளை தெருவில் உள்ள பவானி கடைக்கு அதன் உரிமையாளர் சந்தோஷ் குமார் என்பவர் கடையில் பணிபுரிந்த நிர்மல் குமாருடன் கொண்டு சென்ற போது பறிமுதல் செய்து இதுகுறித்து
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து தற்காலிகமாக அந்த கடையை மூடியுள்ளனர். இதேபோன்று ஆட்டோவில் ஆரம்பாக்கம் அருகே கடத்தி செல்லப்பட்ட நூறு கிலோ குட்கா புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து ஆரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 380 கிலோ குட்கா புகையிலை. பொருட்கள் சரக்கு வாகனம் ஆட்டோவில் பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி