திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ராமலிங்கபுரம் முதல் தச்சூர் கூட்டு ரோடு வரை தச்சுர் - சித்தூர் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது,
இந்நிலையில் ஆறு வழி சாலைக்காக விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்கி உள்ள நிலையில் சாலை பணி நடக்கும் இடங்களில் மீதமுள்ள நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் பேரண்டூர் பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் மழை நீர் அனைத்தும் விவசாய நிலங்களில் நின்று விடுவதால் நெற்பயிர் நடவு செய்து சுமார் பத்து தினங்களில் 100கும் ஏக்கர்களில் நடவு செய்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது, விவசாய நிலங்களில் தேங்கும் நீர் ஆரணி ஆற்றுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் சாலை பணிகளால் அந்த வழிகள் முற்றிலும் மழை நீர் செல்ல வழி இல்லாமல் விவசாய நிலங்களில் தேங்கி உள்ளது உடனடியாக தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு கல்வெட்டுகளை ஏற்படுத்தி விவசாய நிலங்களில் மழைநீர் தேங்காதவாறு வழித்தடங்களை தூர்வாரி தர வேண்டும் விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை பூச்சிக்கொல்லி மருந்தை கையில் பிடித்தவாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு விவசாய நிலங்களிலேயே தங்கள் உயிரை கொடுத்து விடுகிறோம் என்று எச்சரிக்கை விடும் அளவிற்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.