சட்டவிரோதமாக செயல்படும் மண் குவாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

64பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கூனிப்பாளையம் பகுதியில் சிட்கோ நகர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெ. பாஸ்கர் என்பவர் கிராவல் மண் எடுக்க புல எண் - 169 /2C4 வில் 9. 71 ஹெக்டரில் 12. 01. 2024 முதல் 11. 01. 2025 வரை கனிமவளத்துறையிடம் உரிமை பெற்றுள்ளார். ஆனால் உரிமம் பெற்ற இடத்தை விட்டு, கச்சூர் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக டாராஸ் லாரிகளில் 10, ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கிராவல் மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 5 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் கூனிபாளையத்தில் 24 ஏக்கர் பட்டா நிலத்தில் ஒரு வருடத்திற்கு கிராவல் மண் எடுக்க கனிமவளத்துறை அதிகாரிகளிடம் அனுபெற்றுக்கொண்டு ஒரு வருடத்தில் எடுக்க வேண்டிய கிராவல்மண்ணை ஒரு மாதத்தில் எடுத்து அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக தட்டிக்கேட்கும் பொதுமக்களை அடியாட்கள் வைத்து, குண்டர்களை வைத்தும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த கிராவல்மண் குவாரியில் கஞ்சா போதையில் ஒரு கும்பல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதால் அருகே இருக்கும் கிராமமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக செயல்படும் குவாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி