திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருபுரம் கிராமத்தில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக 100கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என
குற்ற சாற்றுகின்றனர்.
இந்நிலையில் ஊத்துக்கோட்டை
வட்டாட்சியர் மதன்,
வெளிப்படையான விசாரணை இல்லாமல் மறைமுகமாக
அதே பகுதியில் வீடுகட்டி வசித்து வரும் வெளியூர் பகுதியில் சார்ந்த நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர், ஆனால் சில நாட்கள் கழித்து பயனாளிகளுக்கு தெரியாமலே
கலைஞர் கனவு திட்டம் வீடு கட்டுவதற்கான வழங்கப்பட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதைக் குறித்து ஊத்துக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டும் அதனை அவர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாதபடி அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும்
மேலும் இதனைத் தொடர்ந்து
விடுதலை இயக்கத்தின்
மாவட்ட செயலாளர்
அன்பு தலைமையில்
50கும் மேற்பட்டோர் வெளியூர் பகுதிகளை சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வட்டாட்சியாரை அழைத்து உரிய முறையில் விசாரித்து, நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு
இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.