மாதர்பாக்கம்: மனைவியை கொன்று புதரில் வீசி நாடகமாடியவர் கைது

75பார்த்தது
கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கொன்று உடலை முட்புதரில் வீசி நாடகமாடிய கணவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மனைவி வெங்கட்டம்மாள் இவர்களுக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர் இந்த நிலையில் வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள முட்புதரில் வெங்கட்டம்மா சடலமாகக் கிடந்தார் அவரது காதுகளில் ரத்தம் வடிந்து முகத்தில் மற்றும் வயிற்றில் காயங்கள் இருந்தது இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் மற்றும் காவல்துறையினர் வெங்கட்டம்மாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கட்டம்மாவின் கணவர் சீனிவாசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் குடும்பத் தகராறுஏற்பட்டு மனைவியை அடித்துக்கொன்று உடலை முட்புதரில் வீசியதாக சீனிவாசன் தெரிவித்தார் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்தக் கொலை சம்பவத்தில் சீனிவாசனுக்கு யாரேனும் சடலத்தை கொண்டு சென்று புதரில் வீச உதவினார்களா என்ற கோணத்திலும் பாதிரி வேடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி