கும்மிடிப்பூண்டி - Kummidipoondi

ஊத்துக்கோட்டை: சாலையில் மழை நீர் கடந்து செல்ல மாணவர்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் கிராமத்தில் கொட்டி தீர்த்த மலைக்கு பள்ளி முன்பு சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமியர் அங்கன்வாடி குழந்தைகள் மழை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தேங்கிய நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பாலவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றுக்கு வரும் குழந்தைகள் போதிய மழை நீர் வடிகால் வசதி இன்றி சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்பதால் அதனைக் கடந்து பள்ளிக்குச் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாயினர்.  குளம் போல தேங்கி உள்ள தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விச ஜந்துக்கள் புழு பூச்சிகள் உள்ளதால் தண்ணீரில் நடந்து செல்லும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே பள்ளிக்கூடம் முன்பு குளம் போல் தேங்கி இருப்பதை அகற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా