அமைச்சர் வருகையால் கழிவுகளை மறைத்து வைத்த ஒப்பந்த நிறுவனம்

74பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி வருகை தர உள்ளதால் மருத்துவக் கழிவுகளை பழைய மார்ச்சுவரி அறையில் மறைத்து வைத்த மருத்துவமனை கழிவுகளை கையாளும் ஒப்பந்த நிறுவனம்.





திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறுபான்மையின் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் ரூபாய் 2 கோடியே 33 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கி துவக்கி வைக்க வருகை தந்தார் இந்த நிலையில் மருத்துவமனை பின்புறம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையத்தின் அருகில் குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் பிறந்துள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் விதமாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தது அமைச்சர்களின் வருகையால் இதனை கையாண்டு வரும் ஒப்பந்த நிறுவனம் மருத்துவ கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி பழைய மார்ச்சுவரி அறையில் மறைத்து வைத்தனர் மருத்துவமனை பின்பு சுகாதாரமற்ற முறையில் கழிவுகள் கொட்டப்பட்டு நோய் தொற்று பரவும் விதத்தில் உள்ளதை நிரந்தரமாக சீரமைத்திட வேண்டும் என்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி