வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக ஆறுதல்

75பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து 66 வீடுகள் கட்டி சுமார் 50 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.
இது தொடர்பாக தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஆக்கிரமிப்பில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டது.
மேலும் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று தவெக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தவெக கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து இடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பழங்குடியினர் வீடுகளை பார்வையிட்டு இது தொடர்பாக தவெக தலைமையில் பேசி சுமுக முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தவெக தலைமை நிர்வாகத்தில் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு தவெக சார்பாக வீடுகள் கட்டித் தரப்படுமா என்ற கேள்விக்கு தலைமை நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி