திருவள்ளூர் பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரி விழா

77பார்த்தது
திருவள்ளூர் பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரி விழா
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில், மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழா முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்விழா, நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, கிராம தேவதை பூஜையுடன் துவங்கியது. நேற்று இரவு, உற்சவர் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும், காலை சிறப்பு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 27ம் தேதி, அன்னை மரகதாம்பிகை, வால்மீகீஸ்வரர் சுவாமிக்கு, இரவு 6: 306:30 மணிக்கு மேல், 8: 008:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி