திருவள்ளூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்..

80பார்த்தது
திருவள்ளூரில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் தர்ணாவில் ஈடுபட்டனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். 

மாவட்ட தலைவர் திவ்யா தலைமை வகித்தார். இதில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். இது தொடர்ந்து இரவில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை கொண்டு அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங்களை பூர்த்தி செய்து, இளைஞர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், தேர்தல் காலத்தில் அளித்த அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி