திருவள்ளூர்: தங்கை கணவரை கத்தியால் கொடூரமாக குத்திய அண்ணன்
ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் குரு சத்யா /32 இவருக்கு திவ்யா/24 என்ற பெண்ணுடன் 2018 ம் ஆண்டு காதல் திருமணமாகியுள்ளது. குரு சத்யாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து திவ்யா பூந்தமல்லி நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்துள்ளார். இதற்கிடையே குரு சத்யா அடிக்கடி திவ்யா வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரை ஆவடி மகளிர் போலீசார் விசாரித்த போது திவ்யாவின் அண்ணன் மகேஸ்வரன் காவல் நிலையத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குரு சத்யாவின் முதுகில் குத்தியுள்ளார். குரு சத்யாவை மீட்ட ஆவடி காவல் துறையினர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மகேஸ்வரனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் குரு சத்யாவை மகேஸ்வரன் வீட்டு சமையல் கத்தியால் குத்தியபோது கத்தி முதுகிலேயே உடைந்த நிலையில் இருந்ததாகவும். அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கத்தியை அகற்ற அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரியவந்துள்ளது.