வாக்கிங் என்றாலே 10-15 நிமிடங்கள் நடந்தால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் இவ்வளவு குறைவாக நடப்பதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு 40-45 நிமிடங்கள் நடக்க வேண்டும். தலையை குனிந்து கொண்டு வாக்கிங் செல்லக்கூடாது. மோசமான தோரணையில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு செல்வது, முதுகை வளைத்துக் கொண்டு செல்வது, தவறான காலணிகளை அணிந்து கொண்டு செல்வது போன்றவைக் கூடாது. இரு கைகளையும் வீசி நேரான நடைப் பயிற்சி மேற்கொள்வது சிறந்த பலன்களை தரும்.